வகுப்பு தோழியை ஏஐ மூலம் ஆபாச வீடியோ உருவாக்கி ரூ.10 லட்சத்திற்கு விற்ற நபர்.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran

திங்கள், 14 ஜூலை 2025 (12:07 IST)
வகுப்பு தோழியின் புகைப்படங்களை ஏஐ டெக்னாலஜி மூலம் வீடியவாக மாற்றி அதன்பின் அதை மீண்டும் ஆபாச வீடியோவாக மாற்றியதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு 10 லட்ச ரூபாய் வரை சம்பாதித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
 
அசாம் மாநிலத்தை சேர்ந்த போரா என்ற நபர் தனது வகுப்பு தோழியை காதலித்த நிலையில் அதன்பின் அவர் சில பிரச்சனைகளால் இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் அந்த தோழி திருமணம் ஆகி சென்றுவிட்ட நிலையில் அவரை பழி வாங்குவதற்காக அவரது புகைப்படங்களை ஏஐ டெக்னாலஜி மூலம் ஆபாச வீடியோவாக போரா மாற்றி உள்ளார்.
 
அதனை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதோடு ஆபாச இணையதளங்களுக்கும் விற்பனை செய்து உள்ளார் என்றும் இதன் மூலம் அவருக்கு 10 லட்ச ரூபாய் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.
 
தன்னுடைய முகத்தை ஏஐ மூலம் ஆபாச வீடியோவாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பரவி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில் குற்றவாளி அவரது வகுப்பு தோழர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னை காதலிக்காத வகுப்பு தோழியை பழி வாங்குவதற்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்