காதலியை சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன்.. அயோத்தி லாட்ஜில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

திங்கள், 14 ஜூலை 2025 (12:30 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள லாட்ஜ் ஒன்றில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரண்டு பேர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலியை கொன்று வாலிபர் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள கோட்வாலி என்ற பகுதியில் ஒரு லாட்ஜில் இளம் ஜோடி அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், அந்த அறையில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் ஹோட்டல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இரண்டு உடல்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
 
இந்த ஜோடி காதலன் - காதலியாக இருக்கலாம் என்றும், அந்த வாலிபர் தனது காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் ஹோட்டல் அறையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை. 
 
இரண்டு உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் அயோத்தி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்