செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (07:11 IST)
ஒருவரின் உயிருக்கு குந்தகம் விலைவிக்காத வகையில், செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமல்ல என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களால்  ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகம். அவ்வாறு போக்குவரத்து விதி மீறுபவர்கள் சட்டம் 118 (இ) ன் பிரிவின்படி 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.
 
இந்நிலையில் கேரளாவில் காக்கநாட்டை சேர்ந்த சந்தோஷ் என்பவர் செல்போனில் பேசியவாறு கார் ஓட்டியதால் அவர் மீது  118 (இ)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொதுமக்களின் உயிருக்கு  குந்தகம் விலைவிக்காத வகையில் செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என தீர்ப்பளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்