ஓட்டுநர் போன் பேசுவதை புகைப்படம் எடுத்தால் பரிசு; உபி அரசின் புதிய யுத்தி

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (14:30 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் ஓட்டுநர் போன் பேசுவதை புகைப்படம் எடுத்து கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் பெருகி கொண்டிருக்கும் சாலை விபத்துகளை குறைக்க மாநில அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது, அரசு பேருந்து ஓட்டுநர்கள், பேருந்தை ஓட்டும்போது செல்போன் பேசுவதை புகைப்படம் எடுத்து கொடுத்தால் பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும்.
 
இதற்காக போக்குவரத்து துறை பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணை வழங்கியுள்ளது. அந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் பயணிகள் புகைப்படத்தை அனுப்பி வைக்கலாம். உத்தரபிரதேச மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்வந்திரே தேவ் சிங் இந்த திட்டத்தை துவங்கி வைத்தார்.  
 
இந்த திட்டத்தின் மூலம் பயணிகளுக்கு புகார் அளிக்கும் அதிகாரம் கிடைக்கும். ஓட்டுநர்களிடையே பொறுப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்