ஆண் மயில் பெண் மயிலுடன் உறவு கொள்ளாது. அதனால்தான் அது தேசிய பறவையாக உள்ளது என்று ராஜஸ்தான் நீதிபதி சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு பூங்காவில் மயில்கள் உடலுறவு கொள்வதை பார்க்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது.
ஆண் மயில் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை. அது ஒருபோதும் பெண் மயிலுடன் உடலுறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் அடைகிறது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா சமீபத்தில் கூறியிருந்தார்.
இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள், கேலி கிண்டல்கள் வந்தன. இதனையடுத்து மயில்கள் உடலுறவு கொள்ளும் என்பதை விளக்கும் வீடியோக்கள் வெளியாகின. இந்நிலையில் கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சூலனூர் பூங்காவில் மயில்கள் உடலுறவு கொள்ளுமா? என்பதை அறிந்து கொள்ள தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதற்கு முன்னர் இந்த பூங்காவுக்கு 10 முதல் 12 வரை பார்வையாளர்கள் வருவார்கள் ஆனால் தற்போது 200 முதல் 300 வரை பார்வையாளர்கள் மயில்கள் உடலுறவு கொள்வதை அறிந்து கொள்ள வருகின்றனர். இந்த பூங்காவில் 300 மயில்கள் உள்ளதாக கூறப்படுகிறது.