மாப்பிள்ளைக்கு கண் குறைபாடு: திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:49 IST)
மாப்பிள்ளைக்கு கண் குறைபாடு: திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
மாப்பிள்ளைக்கு கண் குறைபாடு இருப்பதை அறிந்ததும் மணப்பெண் திருமண மேடை யிலேயே திருமணத்தை நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அவ்ரியா என்ற மாவட்டத்தில் அர்ஜுன் சிங் என்பவருக்கும் மணப் பெண் ஒருவருக்கும் திருமணம் நடக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாள் அன்று திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகனுக்கு கண் குறைபாடு இருப்பதாக மணமகளுக்கு தெரியவந்தது
 
இதனை அடுத்து செய்தித்தாளை எடுத்து கண்ணாடி இல்லாமல் வெறும் கண்களால் மணப்பெண் அர்ஜுன் சிங்கை வாசிக்கச் சொன்னார். கண்ணாடி இல்லாமல் அவர் செய்தித்தாளில் உள்ளதை வாசிக்க முடியாததால், மாப்பிள்ளைக்கு கண் பார்வை குறைபாடு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து தனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று அந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்