பள்ளி மாணவர்களுக்கு 2 லட்சம் விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஆணையர் இன்று உத்தரவி பிறப்பித்துள்ளார்.
மிழகத்தில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பர்வி வரும் நிலையில், தற்போது ஓரளவு குறைந்துவருகிறது.
இந்நிலையில், கோவை, திருப்பூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வேகமாக நடைபெற்று வரும் நிலையில், 2 லட்சம் விலையில்லா முக்குக் கண்ணாடிகள் வழங்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணைய நந்தகுமார் கூறியுள்ளதாவது: பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து மூக்குக் கண்ணாடிகள் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜுலையில் பள்ளிகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.