தேசிய கீதத்தின் போது அமர்ந்திருந்த மத்திய அமைச்சர் ...

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (17:28 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு பல்கலைக் கழக விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, பாஜக மூத்த தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அமர்ந்திருந்தார். இந்த விவகாரம்  சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சோலாபுர் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில்  நடந்த விழாவிற்கு மத்திய நிதி அமைச்சர் மற்றும் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி அழைக்கப்பட்டிருந்தார்.
 
விழாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, நிதின் கட்காரி அமர்ந்திருந்தார். இது குறித்து அதிகாரிகள் கட்காரிக்கு உடல்நிலை சரியில்லாததால் அமரவைக்கப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.
 
மேலும், சில  மாதங்களுக்கு முன்பு ஒரு விழா மேடையில் நின்றிருந்த கட்காரி உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால் , திடீரென சரிந்து கீழே விழுந்தார். இதுபோன்று பலமுறை அவர் கீழேவிழுந்துள்ளதால் பொதுநிகழ்ச்சியில் அவரை அமரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்