மாதுளை ஜூஸை தினமும் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

வெள்ளி, 11 மார்ச் 2022 (15:08 IST)
மாதுளை ஜூஸில் உள்ள வைட்டமின் கே, இரத்தம் உறைவதைத் தடுக்கும் மற்றும் ஃபோலேட் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு உதவும்.


மாதுளை ஜூஸ் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும்.

மாதுளை ஜூஸ் சர்க்கரை நோயை எதிர்க்கும். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழங்களை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால் இந்த பழத்தால் தயாரிக்கப்படும் ஜூஸைக் குடித்தால், அது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகளையும் தடுக்கும்.

மாதுளை ஜூஸில் ஃபோலேட் அதிகம் உள்ளது. இது இரத்த சோகையை சரிசெய்ய உதவும். இந்த ஜூஸில் இரும்புச்சத்தும் வளமான அளவில் நிறைந்துள்ளதால், இரத்த சோகை நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மாதுளை ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவும். இந்த ஜூஸில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள், முதுமை செயல்முறையைத் தாமதப்படுத்தும்.

மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், சரும சுருக்கம் தடுக்கப்படுவதோடு, புதிய செல்களைப் புதுப்பித்து, பல்வேறு சரும தொற்றுகள் மற்றும் நோய்களும் தடுக்கப்படும். மேலும் இது பிம்பிள், பருக்கள் மற்றும் சரும வறட்சியைத் தடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்