இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் அதை ஏற்காத சோசியல் மீடியா நிறுவனங்கள் மீது நீதிமன்ற சம்மன் அனுப்பி விளக்கம் பெறப்பட்டது. இந்திய அரசின் கொள்கைகளை ஏற்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் பல சோசியல் மீடியா நிறுவனங்களும் அரசின் கொள்கைகளை ஏற்றன. ஆனால் ட்விட்டர் இந்திய அரசின் கொள்கைகளை ஏற்பதில் கால தாமதம் செய்து வந்த நிலையில் அதன் இண்டர்மீடியேட்டர் என்ற அங்கீகாரம் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.