டிவிட்டர் ஸ்பேஸில் தனுஷ் செய்த சாதனை!

செவ்வாய், 8 ஜூன் 2021 (17:22 IST)
நடிகர் தனுஷ் நேற்று டிவிட்டர் ஸ்பேஸில் பேசியதை ஒட்டுமொத்தமாக 17000 பேர் கேட்டுள்ளனர்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். இந்த படம் நெட்பிளிக்ஸில் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக டிவிட்டர் தளத்தின் ஸ்பேஸில் கலந்துகொண்டு பேசினார். அதைக் கேட்க ஒட்டுமொத்தமாக 17 ஆயிரம் பேர் வரை சேர்ந்துள்ளனர். இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை இதுவாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்