சமுக வலைத்தளமான டிவிட்டரில் #குடிகெடுக்கும்_ ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா இரண்டாம் அலையின் தொற்றுக் குறைந்து வருகிறது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொற்றுப் பரவல் அதிகம் உள்ளதாக கூறப்படும் 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாசியத் தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் கொரொனா பாதிப்பு குறைவாக உள்ள சுமார் 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு நாளும் கொரோனா நோய் தொற்று ஆயிரக்கணக்கில் இருக்கும் நிலையில், இறப்பு நூற்றுக்கணக்கில் உள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது அவசியமா? என ஸ்டாலினுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அதோடு சமுக வலைத்தளமான டிவிட்டரில் #குடிகெடுக்கும்_ ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.