ட்விட்டர் நிறுவனம் மீது உ.பி. போலீஸ் வழக்குப்பதிவு: என்ன காரணம்?

புதன், 16 ஜூன் 2021 (08:32 IST)
முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் மீது உத்தரப் பிரதேச மாநில அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது
 
உத்தரப்பிரதேச மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டரில் வைரலாகும் வீடியோ ஒன்றை நீக்கும்படி கேட்டுக் கொண்டது. இஸ்லாமிய முதியவர் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் என கூறும்படி வலியுறுத்தி ஒரு கும்பல் அடித்த வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு உபி அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் அந்த வீடியோ நீக்கப்படவில்லை 
 
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஏன் நீக்கவில்லை என கூறி டுவிட்டர் நிறுவனம் மீது உத்தரப்பிரதேச மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிகிறது
 
ஏற்கனவே புதிய சமூக வலைதள விதிகளை எதிர்த்து டுவிட்டர் குரல் கொடுத்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் மீது புதிதாக வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்