கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த போது கேரளாவில் அதிகளவிலான தொற்று காணப்பட்டது. ஆனால் அம்மாநில அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதன் மூலம் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது. 3,099 பேர் சிகிச்சையில் உள்ளனர். எனவே, திருவனந்தபுரம் மாவட்டத்தில் ட்ரிபுள் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லாக்டவுனால் அனைத்து சாலைகளும் மூடப்பட உள்ளன. மருந்து கடைகள், மளிகை கடைகள் மட்டும் திறந்திருக்கின்றன. அதே போல வாகனங்கள் எதுவும் இயங்கவும் அனுமதி இல்லை. தலைமை செயலகம், அரசு அலுவலகங்கள்,நீதிமன்றங்கள் மூடப்பட்டிருக்கும்.