உத்தரப்பிரதேசத்தில் 60 வழக்குகளுக்கு மேல் உள்ள பிரபல ரௌடி விகாஷ் துபேவை கைது செய்ய சென்ற டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை அவரது ஆட்கள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து அவரை மத்திய பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் கைது செய்த போலிஸார், இன்று என்கவுன்டரில் போலிஸார் சுட்டுக்கொலை செய்துள்ளன.
கைது செய்யப்பட்ட விகாஸ் துபேவை உபி மாநிலத்திற்கு கொண்டு வரும் வழையில் திடீரென பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இந்த பரபரப்பை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதாகவும், இதனையடுத்து போலீசார் சுட்டதில் விகாஸ்துபே மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் போலிஸாருக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.