காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி - இன்று முதல் !

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (08:57 IST)
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று முதல் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு நீக்கியதை தொடர்ந்து காஷ்மீரின் பலகட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வெளிஉலக தொடர்பற்று இருக்கிறது. இந்நிலையில் காஷ்மீர் மீதானக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றான காஷ்மீரில் சுற்றுலாவுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த தடையை நீக்குவதாக ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். அதன் படி இன்று முதல் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்