திருப்பதி கோவிலில் மொட்டை போடும் நாவிதர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பக்தர்கள் மொட்டை போட முடியாமல் அவதி அடைந்ததாக கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செய்யும் பக்தர்களிடம் நாவிதர்கள் பணம் வாங்கக்கூடாது என்று தேவஸ்தானம் கூறி உள்ளது. ஆனால் பக்தர்கள் தாமாக முன்வந்து அவர்களுக்கு பணம் கொடுப்பதை அவர்கள் வாங்கி வருகின்றனர்
இந்த நிலையில் நாவிதர்களை கண்காணிக்க அவர்களின் ஆடையை களைந்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவர்களிடமிருந்து பணம் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படுகிறது
இதனால் ஆத்திரமடைந்த நாவிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேவஸ்தான அலுவலகம் முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நாவிதர்களின் போராட்டம் காரணமாக சில மணி நேரம் பக்தர்கள் மொட்டை போட முடியாமல் அவதி அடைந்ததாக கூறப்படுகிறது