திருப்பதிக்கே நாமமா? உண்டியலில் கைவரிசை காட்டிய நபர்! – திருப்பதியில் அதிர்ச்சி!

வியாழன், 27 அக்டோபர் 2022 (09:48 IST)
திருப்பதி தேவஸ்தான உண்டியலில் பணத்தை எண்ணும்போது திருடிய வங்கி ஊழியர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் ஏராளமான பணம், தங்க நகைகள் போன்றவற்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை பணத்தை எண்ண வங்கி ஊழியர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்கின்றனர். இந்த உண்டியல் பணம் என்னும் முறையை பரகாமணி சேவை என்று அழைக்கின்றனர்.

கடந்த 23ம் தேதி பரகாமணி சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மதியம் 2.30 மணி அளவில் பணி முடிந்து வெளியேறியுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த மாஸ்க் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகளை அவரை சோதனை செய்துள்ளனர்.

ALSO READ: வெடிமருந்து பொருட்களை ஆன்லைனில் வாங்கிய முபின்! – காவல்துறை அதிர்ச்சி தகவல்!

அப்போது அந்த மாஸ்க்கில் பணத்தை பதுக்கி அவர் எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 47 இரண்டாயிரம் ரூபாய் தாள்களை மாஸ்க்கில் பதுக்கு அவர் எடுத்து சென்றுள்ளார். மொத்தமாக ரூ.94 ஆயிரத்தை திருட முயன்றுள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர் ஏற்கனவே பிரசாத லட்டு டோக்கன்களை திருடி விற்று சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளதாம்.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்