ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி உலக கடிதம் எழுதும் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலக கடித தினம் உலகில் உள்ள அனைத்து மக்களால் கொண்டாடப்படுகிறது
இன்றைய கம்ப்யூட்டர் உலகில் கடிதம் எழுதுவது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதனை அடுத்து இன்றைய காலத்தில் உலக கடிதம் எழுதினால் அனைவரும் போற்றிக் கொண்டாட வேண்டியது கட்டாயமாக ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு உலக கடிதம் எழுதும் தினம் என்பதை செப்டம்பர் 1ஆம் தேதி கொண்டுவந்தார். கையால் கடிதம் எழுதும் முறையின் காதலரான அவர் இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை விட கடிதம் எழுதுவது ஒரு தனிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்று கருதினார்
அதனால்தான் அவர் இதனை கொண்டாடும் வகையில் செப்டம்பர் 1ஆம் தேதி உலக கடிதம் எழுதும் தினம் என்று அறிவித்தார். இன்றைய டிஜிட்டல் உலகில் எழுதுவதற்கு வேலையே இல்லாத நிலையில் இன்று ஒருநாளாவது கடிதம் எழுதி உலக கடிதம் எழுதும் தினத்தை கொண்டாடுவோம்