கொரோனா பரபரப்பு நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில் நாட்டின் 8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
காலியாக 24 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் 5 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் மீதியுள்ள 19 எம்பிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜகவின் இரன்னா கடாடி, அசோக் கஸ்தி ஆகியோரும் அருணாசலப் பிரதேசத்தில் பாஜகவின் நாபம் ரெபியா ஆகிய ஐவர் போட்டியின்றி ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாக தேர்வாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆந்திரா, குஜராத்தில் தலா 4 இடங்கள், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்கள், ஜார்க்கண்ட்டில் 2, மணிப்பூர், மிசோரம், மேகாலயாவில் தலா 1 என மொத்தம் 19 எம்.பி. இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது
19 இடங்களுக்குமான வாக்குப் பதிவு இன்று மாலை முடிவடைந்தவுடன் உடனே வாக்குகள் எண்ணப்பட்டு இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது