பங்குச்சந்தை இன்று பயங்கர சரிவு: முதலீட்டாளர்கள் மீண்டும் சோகம்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (10:02 IST)
பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக சரிவில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்ததிலிருந்தே பயங்கர சரிவாக இருந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் ஒரு சில நாட்கள் பங்குச்சந்தை உயர்ந்தாலும் திடீர் திடீரென பங்குச் சந்தை சரிவை கண்டு வருகிறது. அந்த வகையில் இன்று பங்குச்சந்தை தொடங்கிய சில நிமிடங்களில் சுமார் 550 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
தேசிய பங்குச்சந்தை நிப்டி 160 புள்ளிகள் சரிந்து 15600 என வர்த்தகமாகி வருகிறது அதே போல் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிந்து 52 ஆயிரத்து 450 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்