முதல்வர் ஜெயலலிதா மீது அமைச்சர் பரபரப்பு புகார்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (14:24 IST)
முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற போது எல்லாம் எங்களுடன் அவர் தகராறு செய்கிறார் என நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பாட்டீல் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. இந்த அமைச்சரவையில், நீர்ப்பாசனத் துறை அமைச்சராக பாட்டீல் உள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 29 கோரிக்கைகள் மனுவை வழங்கினார். மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடா அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
இது குறித்து, கருத்து தெரிவித்த கர்நாடகா நீர்பாசனத்துறை அமைச்சர் பாட்டீல், தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் போது எல்லாம், மேகதாது அணை விவகாரத்தில் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால், கர்நடாகா அரசு எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுக்காது என்றார்.
 
 
அடுத்த கட்டுரையில்