ஐரோப்பாவில் தன்னாட்சி பெற்ற நாடான வாடிகன் நகரத்தின் திருத்தந்தையான போப்பாண்டவர், கடந்த சில நாட்களாக சுவாசக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று அவர் இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ள கெமிலி என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தேவையான மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். ஏற்கனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு இதற்காக சிகிச்சை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போப்பாண்டவருக்கு 88 வயது ஆவதால், மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி இருப்பதாகவும், அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.