திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்..!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (08:01 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்று வருவதை அடுத்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
 
திருமலை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. தேரோட்டத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்பசுவாமி எழுந்தருளி வலம் வருகிறார்
 
நான்கு மாட வீதிகளில் வலம் வரும் திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பரவசத்துடன் கோஷமிட்டனர்.
 
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று தேரோட்டம் தொடங்கிய நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்