திருப்பதியில் தங்க தேரோட்டம்.. குவிந்த பக்தர்கள்..!

சனி, 23 செப்டம்பர் 2023 (18:00 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று தங்க தேரோட்டம் நிகழ்வு நடந்து வரும் நிலையில் இதை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது பிரமோற்சவ விழா நடந்துவரும் நிலையில் இன்று முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நடந்தது. இதனை காண நாடு முழுவதும் இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்தனர். 
 
ஏழுமலையான் 4 மாத வீதிகளில் தங்க கருட சேவை செய்தார். இதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர்.
 
இன்று மாலை தங்க தேரோட்டம் நடைபெற இருப்பதை அடுத்து இன்னும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் உணவு, குடிநீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்