மொபைல் எண்களை ஆதாருடன் இணைக்கவில்லையா? இதோ 3 புதிய வழிகள்

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (23:15 IST)
ஆதார் எண்ணை பல்வேறு ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருக்கும் நிலையில் கடைசியாக மொபைல் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இணைப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் முடியவேண்டும் என்ற கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.


 


இந்த நிலையில் இதுவரை மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க அந்தந்த தொலைத்தொடர்பு சேவை அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது வரும் டிசம்பர் முதல் மூன்று புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்று ஒன் டைம் பாஸ்வேர்டு என்ற முறை, இரண்டாவதாக ஆப் என்று கூறப்படும் செயலி முறை, மூன்றாவதாக ஐ.வி.ஆர்.எஸ் என்று கூறப்படும் குரல் பதிவுச்சேவை முறை என மூன்று முறைகளில் வரும் டிசம்பர் 1ஆம்தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்