ஆதாருடன் இணைக்காவிட்டல் மொபைல் சேவை துண்டிக்கப்படாது; தொலைத்தொடர்புத் துறை அதிரடி
புதன், 8 நவம்பர் 2017 (11:17 IST)
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் சேவை துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மம்தா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டல் சேவை துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியதாவது:-
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மொபைல் சேவையை துண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.