ரஜினியால் இந்த சட்டம் இருப்பதை தெரிந்து கொண்டோம்: திருமண மண்டப உரிமையாளர்கள் அறிக்கை!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:54 IST)
தனது திருமண மண்டபத்திற்கு வருமானம் இல்லை என்றும் அதனால் சொத்து வரியை குறைக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கைக்கு மாநகராட்சி தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் அவர் நீதிமன்றம் சென்றார். ஆனால் நீதிமன்றம் ரஜினியை கண்டித்ததை அடுத்து நேற்று அவர் சொத்து வரியை கட்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வருமானம் இல்லாமல் இருக்கும் காலங்களில் சொத்து வரி விலக்கு கேட்கலாம் என்பதை ரஜினியிடமிருந்து தெரிந்து கொண்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
 
தமிழக அரசால்‌ 24-3-2020. முதல்‌ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும்‌, இன்று வரை பொது போக்குவரத்து தடைகள்‌ இருப்பதாலும்‌ திருமண மண்டபங்கள்‌ மற்றும்‌ தங்கும்‌ விடுதிகள்‌ செயல்படாமல்‌ முடங்கி உள்ளன. ஆனால்‌ இவைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின்‌ சார்பில்‌ முழுமையாக சொத்து வரி வசூலிக்க அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது அல்லாமல்‌ சொத்து வரி செலுத்த நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள்‌. ஏற்கனவே மேற்படி தொழிலுக்காக வங்கியில்‌ வாங்கப்பட்டுள்ள கடன்‌ அசல்‌, வட்டி செலுத்த முடியாமலும்‌, சம்பளம்‌ கொடுக்க முடியாமலும்‌ சிரமப்படும்‌ சூழ்நிலையில்‌ இவ்வாறு வெந்த புண்ணில்‌ வேலை பாய்ச்சுவது நியாயமானதல்ல.
 
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ திரு.ரஜினிகாந்த்‌ சார்பாக முறையீடு செய்யப்பட்டதில்‌ இதற்காக சட்டத்தில்‌ இடமுள்ளது என்பதை அறிய முடிந்தது. ஆகவே கோவில்‌ யாத்ரீகர்களை நம்பி தொழில்‌ செய்து வரும்‌ கும்பகோணம்‌ பகுதி தங்கும்‌ விடுதி மற்றும்‌ திருமண மண்டப உரிமையாளர்களின்‌ நலன்‌ கருதியும்‌ மற்றும்‌ ஒட்டுமொத்த: தமிழக நிலைமையை கருத்திற்‌ கொண்டும்‌ மேற்படி கட்டிடங்களுக்கு சொத்து
வரிவிதிப்பை கொரானா பேரிடர்‌ காலத்தில்‌ ரத்து செய்து உத்தரவிட கேட்டுக்‌ கொள்கிறோம்‌.



தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்