அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அழைத்து கொண்டு இந்தியாவுக்கு இரண்டு விமானங்கள் வந்துள்ள நிலையில், நேற்று இரவு மூன்றாவது விமானமும் வந்து இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் அரசு பதவியேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக குடியிருக்கும் நபர்களை நாடு கடத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி, 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர்களின் கைகளில் சங்கிலிகள் பூட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில், பிப்ரவரி 15ஆம் தேதி இரவு, இரண்டாவது விமானம் வந்தபோது அதில் 117 இந்தியர்கள் இருந்ததாகவும், அவர்களும் சிறைக் கைதிகள் போல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு, மூன்றாவது விமானம் 112 இந்தியர்களுடன் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது. இரவு 10 மணிக்கு வந்த அந்த விமானத்தில் அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கைகளில் சங்கிலிகள் போடப்பட்டதா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.