வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, அவர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இந்தியாவுக்கு எஃப் 35 போர் விமானம் வழங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த வருடம் முதல் இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய உள்ளதாகவும், குறிப்பாக எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் இந்தியாவுடன் அதிக கவனம் செலுத்துவோம் என்றும், இரு நாடுகளின் வர்த்தக பரிவர்த்தனை 500 பில்லியன் அமெரிக்க டாலராக இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா வழங்கும் அதிநவீன எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.