ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற திருடனுக்கு கொடூர தண்டனை!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (21:55 IST)
பீகார் மாநிலத்தில்  நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி  நடந்து வருகிறது.

இங்கு ஓடும் ரயிலில்  பயணிகளிடம் இருந்து செல்போன் பறிக்க முயற்சி செய்த ஒரு  நபரைக் கையும் களவுமாகப் பிடித்த பயணிகள், ரயில் பெட்டிக்குள் இருந்தபடி,  திருடனின் கையைப் பிடித்து, சுமார் 15 கிமீ தூரம் அவரை தொங்கியபடியே இழுத்துச் சென்றனர்.

ஓடும் ரயிலில் எதிர்க்காற்று அடிக்கும் வேகத்தில், திருடன் தன்னை விட்டு விடும்படி கதறியும் அவர்கள் அவனுக்கு இந்தக் கொடூர தண்டனை கொடுத்தனர்.

இந்த நிலையில், ஜன்னலில் தொடங்கவிடப்பட்ட திருடன் குறிப்பிட்ட தூரம் வந்ததும்  போலீஸாரிடம் அவனை ஒப்படைத்தனர்.  இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்