மாணவர்கள் காலில் விழுந்த பேராசிரியர்...

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (14:55 IST)
வட இந்தியாவிலுள்ள மத்திய பிரதேசத்தில் மாண்ட்சோர் பகுதியில் ஒரு வணிக கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர்  தினேஷ் குப்தா.
வழக்கம் போல இவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது ’அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்’ அமைப்பினை சேர்ந்த மாணவர்கள்  நம் 'தேசத் தாய்க்கு 'வெற்றி முழக்கம் எழுப்பி உள்ளனர்.

இதனால் வகுப்பை விட்டு வெளியே வந்த பேராசிரியர் அம்மாணவர்களிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளதாக தெரிகிறது.இதனால் கோபம் அடைந்த மணவர்கள்  காவல்துறையினரிடம் புகார் செய்வோம் என மிரட்டியுள்ளனர்.
 
இதனையடுத்து மாணவர்களின் மிரட்டலுக்கு அச்சமடைந்த பேராசிரியர் அந்த மணவர்களின் காலில் விழுந்துள்ளார். அதை வீடியோ எடுத்து ஒரு மாணவர் வெளியிட்டுள்ளார். 
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்