'தல கடவுள் மாதிரி' மெர்சல் சிட்டுக்குருவி பாட்டி பாராட்டு

வியாழன், 27 செப்டம்பர் 2018 (17:20 IST)
அஜித் தங்கமானவர் என மெர்சல் படத்தில் சிட்டுக்குருவியாக நடித்த பாட்டி பாராட்டி உள்ளார்.
விஜய்யின் மெர்சல் படத்தில் சிட்டுக்குருவியாக நடித்து பிரபலமானவர் சீனியம்மா. அவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தில்  நடித்துள்ளார்.
 
இந்நிலையில் அஜித் குறித்து  சிட்டுக்குருவி பேசிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சிட்டுக்குருவி கூறியிருப்பதாவது, "தல ஒரு கடவுள் மாதிரி. கேரவனுக்குள் போக மாட்டார், மக்களுடன் தான் இருப்பார், எங்களுடன் தான் பேசுவார், எங்களுடன் தான் சாப்பிடுவார், கடவுள்  என்றால் அவர் தான் கடவுள். தங்கமானவர் தல" என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்