கல்லூரியில் கோஷம் –காலில் விழுந்த பேராசிரியர்

சனி, 29 செப்டம்பர் 2018 (14:47 IST)
மத்திய பிரதேசத்திலுள்ள ராஜீவ் காந்தி அரசு கல்லூரியில் பேராசிரியர் ஒருவரை மாணவர்கள் தேசத்துரோகி எனக் கூறியாதால் விரக்தியடைந்த அவர் மாணவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்.

மாண்ட்சௌர் நகரிலுள்ள ராஜிவ் காந்தி கலைக்கல்லூரியில் பிஎஸ்சி நான்காம் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமானது. எனவே அத்ற்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் மனுவை முதல்வரிடம் கொடுக்கச் சென்ற ஏபிவிபி எனும் வலதுசாரி மாணவ அமைப்பு கோஷமிட்ட்டுக் கொண்டே சென்றனர். போராட்டத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத ‘வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே’ என்ற கோஷங்களையும் அவர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் பக்கத்து வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் தினேஷ் குப்தா மாணவர்களை கோஷமிட வேண்டாம். தன்னால் பாடம் நடத்த முடியவில்லை என கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஏபிவிபி மாணவர்கள் ‘பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம்’ போன்ற கோஷங்களை எழுப்பக் கூடாது என எப்படி சொல்லலாம். உங்கள் மீது நாங்கள் காவல்துறையில் புகார் கொடுக்கப் போகிறோம். நீங்கள் ஒரு தேசவிரோதி.’ என அவரை மிரட்டி உள்ளனர்.

இதனால் வெறுப்படைந்த அந்த பேராசிரியர் அங்கிருந்த ஏபிவிபி மாணவர்கள் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார். இதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் அங்கிருந்து நகர்ந்து செல்ல ஆரம்பித்தனர். ஆனாலும் பேராசிரியர் தினேஷ் குப்தா அவர்களைத் துரத்தி சென்று ஒவ்வொருவர் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்