நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை காப்பாற்றிய போலீஸ்காரர் ! வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (19:03 IST)
உத்தரகாண்ட் மாநிலம் கங்கை நதியில் ஒரு இளைஞர் அடித்துச் செல்ல்லப்படும் போது, ஒரு போலீஸ்காரர் ஆற்றில் இறங்கி அந்த இளைஞரை காப்பாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் வசித்து வந்த விஷால் என்ற இளைஞர் அங்குள்ள கங்கை நதியில் நீராட சென்றுள்ளார். ஆனால் கங்கை நதி சீற்றத்துடன் வந்ததா விஷால் ஆற்றுடன் அடித்துச் செல்லப்பட்டார்.
.
அவர் நீரில் அடித்துச் செல்லப்படுவதை காவலர் சன்னி என்பவர் பார்த்து,உடனே சற்றும் தாமதிக்காமல் நீரில் பாய்ந்து விஷாலை காப்பாற்றினார்.பின்னர் சாதுர்யமாக அவர் விஷாலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார். இதனைப் பார்த்த அனைவரும் காவலரின் துணிச்சலைப் பாராட்டி அவருக்கு பாராட்டுகள் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோவை உத்தராகண்ட் காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்