இந்திய அணிக்கு பின்னடைவு… டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இழக்கும் வீரர்!

புதன், 5 ஏப்ரல் 2023 (09:17 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்த போது, இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் முதுகுவலியால் காயமடைந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்யவில்லை. இப்போது அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்துவரும் நிலையில் அவருக்கு தீவிரமான காயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் ஜூன் மாதம் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்