இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 4000ஐ தாண்டி உள்ள நிலையில் மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் கடந்த சில நாட்களாக கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தினசரி கொரோனா பாதிப்பு 1000, 1500 என்று இருந்த நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து இன்று 4000ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.