காவிரியில் 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா முறையிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு, காவிரி ஒழுங்காற்றுக்குழு அளித்த பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கவும், தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.