அடுத்தாண்டு நமது நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா என்ற கூட்டணி கூகுள் மற்றும் ஃபேஸ்புக் சிஇஓக்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், இந்தியாவில் ஃபேஸ்புக், யூடியூப் வாட்ஸ் ஆப் ஆகியவரை நடுநிலையுடன் செயல்படுவதை உறுதி செய்யும்படி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மெட்டா தலைவர் மார்க் ஜூகர்பெர்க் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.