அயோத்தி வழக்கு : உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (14:43 IST)
இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் மசூதியில்தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதில்லை என்று கூறியுள்ளது. இதனால் அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது...
1994 ல் மசூதிகள் இஸ்லாம் மதத்துடன்  இணைந்த இடங்கள் இல்லை என நீதிபதி பரூக்கி தீர்ப்பு கூறியுள்ளார்.
 
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தீபக் மிஸ்ரா,அசோக்,பூசன் ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்துள்ளனர்.
 
அதில் அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.
 
மசூதியில் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இஸ்லாம் மதத்துக்கு உரிய இடமா இல்லையா என்பதை மூன்று நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்