இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்த நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா வெற்றிக்காக தனியாளாகப் போராடினார்.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணிக் கேப்டன் ஷுப்மன் கில் “ரிஷப் பண்ட்டின் விக்கெட் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. எங்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லாமலேயே ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடினார். பெரிய இலக்கு இல்லை என்பதால் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டிக்குள் வந்துவிடுவோம் என நினைத்தோம். ஐந்து நாட்களும் போராடியதை நினைத்தால் பெருமையாக உள்ளது” எனப் பேசியுள்ளார்.