தெலுங்கானா முதல்வர் கூட்டிய முக்கிய கூட்டம். முக ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்?

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (12:04 IST)
பாஜகவுக்கு எதிராக பிரம்மாண்டமாக அணி அமைக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூட்டிய முக்கிய கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.
 
பாஜக காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ள நிலையில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. 
 
இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வால், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவத்சிங்மான்,  சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்
 
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத புதிய அணியை அமைக்க வேண்டும் என்று கொள்கை அளவில் முடிவு செய்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் முக ஸ்டாலினுக்கு இதனால் தான் அழைப்பு விடுக்க வில்லை என கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்