ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் இவரா? பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (11:58 IST)
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் என நேற்றைய தேர்தல் கமிஷன் அறிவித்ததில் இருந்து திமுக அதிமுக உள்பட அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. 
 
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா சமீபத்தில் காலமான நிலையில் அவரிடம் தோல்வி அடைந்தவர் தான் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
 
 கடந்த 2021 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் தோல்வி அடைந்த தமிழ் மாநில காங்கிரஸ் யுவராஜ் மீண்டும் இந்த தேர்தலில் நிறுத்த அதிமுக கூட்டணியை திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனை அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று சந்திக்கின்றனர் என்றும் இந்த சந்திப்பை அடுத்து யுவராஜா ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.\
 
இந்த நிலையில் பாஜக இந்த தொகுதியில் தனித்து போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்