சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (20:24 IST)
சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!
தெலங்கானா மாநிலத்தில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் மொத்தம் 39 பயணிகளும் நடத்துனர் மற்றும் ஓட்டுநரும் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த பேருந்து ஸ்டேஷன்பூர் என்ற பகுதியில் வந்தபோது திடீரென பேருந்தின் பின்பக்கம் இருந்து புகை வந்தது 
 
இதை பார்த்த பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தகவல் தெரிவிக்கவே உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். சிறிது நேரத்தில் பேருந்து மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இருப்பினும் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்