தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்த படத்திற்கு வரி விலக்கு என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் ஒரு மதத்துக்கு எதிரானது என தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை தவிர இந்தியா முழுவதிலும் எந்த மாநிலத்திலும் இந்த படத்திற்கு எதிர்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் சற்று முன் மத்திய பிரதேச மாநிலத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சீமான் உள்பட பல அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் இந்த படத்தை எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஒரு மாநில முதல்வர் இந்த படத்திற்கு வரி விலக்கு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது