ஏர் இந்தியாவுக்காக ஏலத்தொகையை செலுத்திய டாடா நிறுவனம்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (19:30 IST)
ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் தனியார் வசம் செல்ல இருப்பதை அடுத்து இந்த நிறுவனத்தை வாங்க ஏலம் எடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது 
 
இந்த நிலையில் 67 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்க விருப்பம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி ஏலத்தொகையையும் டாட்டா குழுமம் சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
டாடா நிறுவனம் செலுத்திய ஏலத்தொகை ஏற்கப்பட்டால் 67 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றும் என்றும் நீண்டநாள் கனவான விமான நிறுவனம் டாட்டா வசம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி செய்யும் நிலையில் அதனை டாடா நிறுவனம் கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்