4 ஆண்டுகளில் 10 புதிய வகை மின்சார கார்: டாடா அறிவிப்பு

வியாழன், 1 ஜூலை 2021 (20:20 IST)
அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 வகை புதிய மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது
 
இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனம் வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருகும் மின்சார கார் தயாரிப்பில் தனது முழு கவனத்தை செலுத்தி உள்ளது. இந்த நிலையில் டாட்டா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2025-ஆம் ஆண்டுக்குள் மேலும் 10 வகை புதிய மின்சார கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் 
 
எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி விட்டு முழுக்க முழுக்க மின்சார கார்கள் உற்பத்தி மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே ஒரு சில மின்சார கார்களை டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நிலையில் இனி மேலும் 10 கார்களை பத்து வகை கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்