5 ஆக உயர்ந்த குரங்கு அம்மை தொற்று: தெலங்கானாவில் முதல் பாதிப்பு!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (09:23 IST)
டெல்லியைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த சில வாரங்களில் 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோயால் 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

உலகின் பல நாடுகளில் மிக வேகமாக குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில் இந்திய மாநிலமான கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மை நோய்க்கு பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளாவை அடுத்து தற்போது டெல்லியில் உள்ள ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்கண்டறியப்பட்டது. 31 வயதான இந்த நபர் எந்த வித வெளிநாட்டு பயணங்களும் செய்யாத நிலையில் திடீரென குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து டெல்லியைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 40 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. இதனமூலம், இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்