வழக்கறிஞர் நீதிபதியாகும் போது அரசியல் பின்னணியை பார்க்க வேண்டுமா? உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து..!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (11:46 IST)
வழக்கறிஞர் நீதிபதியாகும் போது அவரது அரசியல் பின்னணி குறித்து பார்க்க வேண்டுமா என்பது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு வழக்கறிஞரை நீதிபதியாக நியமிக்கும் போது அவரின் கடந்த கால அரசியல் தொடர்புகள் மற்றும் முன்வைக்கும் கருத்துக்களின் அடிப்படையில் அவரை மதிப்பிடக்கூடாது என்று தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரையை கொலிஜியம் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்கிறது என்றும் பரிந்துரைக்கப்படும் நபர் முன்வைத்த கருத்துக்கள் ஆராயப்படுவதோடு அந்த நபர் குறித்து சம்பந்தப்பட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதி இடம் இருந்து அறிக்கை பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

இத்தகைய வெளிப்படை தன்மையான நியமன நடைமுறையில் அரசு தலையீட்டுக்கு வாய்ப்பே கிடையாது என்றும் நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிபதியாக பதவியேற்று மிகச் சிறந்த நீதிபதியாக மாறி இருக்கின்றனர் என்றும் இதற்கு நீதிபதி கிருஷ்ணா ஒரு சிறந்த உதாரணம் என்றும் சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்