முன்னாள் முதலமைச்சர் என்னவென்று தெரியாமல் பேசுகிறார்! – அமைச்சர் ம.சுப்பிரமணியன்!
புதன், 15 நவம்பர் 2023 (18:05 IST)
தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக தமிழகத்தின் அரசு சார்பில் தொடங்கப்படும் இரண்டாவது பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் ம.சுப்ரமணியன், ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம.சுப்ரமணியன்
முன்னாள் முதலமைச்சர் என்னவென்று தெரியாமல் பேசுகிறார். எதையும் தெரிந்து கொள்ளலாம் அறிக்கை விடுகிறார். எதிர்கட்சி தலைவர் என்பது பொறுப்பான பதவி. ஆனால் அவர் இது போன்று செயல்படுவது அவரின் அறியாமையையும் நிர்வாக திறமையின்மையையும் காட்டுகிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 120 மருத்துவமனைகள் எச்ஆர் என்ற மருந்துவ பணிகள் உருவாக்காமல் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அப்படி தரம் உயர்த்தினால் தரம் உயர்த்தியதற்கு அர்த்தம் அல்ல பெயர்ப்பலகை மட்டுமே மாட்டிக்கொள்ள முடியும், ஆனால் மருத்துவமனை தரம் உயர்த்தி விட்டோம் இரண்டரை ஆண்டு காலமாக மருத்துவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் நியமிக்கவில்லை என்ற தவறான தகவலை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லி வருகிறார்.
டிஎன்பிஎஸ்சியில் 10,250 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் மருத்துவத் துறையில் காலியாக இருந்த டைப்பிஸ்ட் ஓஏ உள்ளிட்ட 986 பணியிடங்கள் நிரப்பப்பட்டு அவர்களது தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமனானை வழங்கி நியமிக்கப்பட்டார்கள்.
மருத்துவத்துறையில் தொடர்ந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எம்ஆர்பி மூலம் மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பும் விவகாரத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டதால் தற்பொழுது அந்த வழக்குகள் முடிவுக்கு வந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்
பட்டுள்ளது. ஓரிரு தினத்திலோ அல்லது ஒரு வார காலத்திலோ அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கின்றோம் அவர் வந்துவிட்டால் உடனடியாக காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
முன்னாள் முதலமைச்சர் என்னவென்று தெரியாமல் பேசுகிறார். எதையும் தெரிந்து கொள்ளலாம் அறிக்கை விடுகிறார். எதிர்கட்சி தலைவர் என்பது பொறுப்பான பொறுப்பு. ஆனால் அவர் இது போன்று செயல்படுவது அவரின் அறியாமையையும் நிர்வாக திறமையின்மையையும் காட்டுகிறது.
காரில் சென்னைக்கும் சேலத்திற்கும் செல்லும் எடப்பாடி பழனிச்சாமி செல்லும் வழியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு சென்று பாம்பு கடி நாய்க்கடி மருந்துகள் இருக்கிறதா அது எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டு தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்ளட்டும்.
போலி மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சமீபத்தில் கூட மூன்று மருத்துவமனைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது போலி மருத்துவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று கவனத்தில் கொண்டு வரும் பொழுது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதார அற்ற முறையில் இருந்த ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்ட கேண்டின்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதுபோல் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள் உணவுத்துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறினார்